செம்மீன் ஸ்டஃப்டு ஜாலர் முர்தபா(prawns stuffed murthaba recipe in tamil)

Shabbu
Shabbu @shabana_shabbu

செம்மீன் ஸ்டஃப்டு ஜாலர் முர்தபா(prawns stuffed murthaba recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ செம்மீன்
  2. 3 வெங்காயம்
  3. தேவையானஅளவு ஆயில்
  4. 1 தக்காளி
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  7. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/4 கப் துருவிய தேங்காய்
  9. உப்பு, கொத்தமல்லி தலை
  10. பொடி செய்ய
  11. 1 டீஸ்பூன் மிளகு
  12. 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சோம்பு
  13. ஜாலர் மாவு தயாரிக்க
  14. 1/2 கிலோ மைதா மாவு
  15. உப்பு, தண்ணீர்
  16. 1 முட்டை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஸ்டவ்வில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும். உடனே இதோடு இஞ்சி பூண்டு விழுது செம்மீன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.

  2. 2

    தக்காளியையும் கொத்தமல்லி இலையையும் நறுக்கி சேர்த்து மூடி போட்டு வேக விடவும். செம்மீன் வெந்து மசாலா சுருண்டு வந்தபின்

  3. 3

    மிளகு சீரகம் சோம்பை பொடி செய்து அரை டீஸ்பூன் அளவுக்கு சேர்க்க வேண்டும். தேங்காய் துருவலையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்து மசாலா சுருள தயார் செய்து ஆற வைக்கவும்.

  4. 4

    ஜாலர் மாவு தயாரிக்க பெரிய மிக்ஸியில் மைதா மாவு உப்பு முட்டை தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். இது நன்றாக ஊற்ற கூடிய பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக தண்ணீர் ஊற்றி கரைக்கலாம். இவ்வாறு ஏதேனும் பாட்டிலில் ஓட்டைகள் போட்டு அதன் மூடியை திறந்து தயார் செய்த மாவு கலவையை உள்ளே ஊற்றி மூடியை மூடிக்கொள்ள வேண்டும்.

  5. 5

    ஒரு நான்ஸ்டிக் தோசை கல்லை அடுப்பில் வைத்து இதனை விருப்பத்திற்கு ஏற்ப சுழற்றி சுழற்றி தோசையாக ஊற்றிக் கொள்ள வேண்டும். ஓட்டைகள் அடைக்கும் விதத்தில் கொஞ்சமாக முட்டை கலவையை தயார் செய்து ஊற்ற வேண்டும். நடுவில் தயார் செய்த செம்மீன் மசாலாவை வைத்து கொள்ளுங்கள்.

  6. 6

    இதனை விரும்பியபடி மடித்து ஆயில் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுக்க சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabbu
Shabbu @shabana_shabbu
அன்று

Similar Recipes