Salem special settukadai mix masala chat

#இந்த சேட்டு கடை மிக்ஸ் எங்கள் சேலம் பஜாரில் சின்ன இடத்தில் உள்ள.து இது எனக்குத் தெரிந்து 45 வருடமாக மூன்று தலைமுறையாக அவர்கள் செய்து தருகிறார்கள். நான் எனது கிட்டத்தட்ட என் 7 வயது முதல் சாப்பிட்டு வருகிறேன்.இன்றும் இந்த கடைக்கு சென்று சாப்பிட்டு வருகிறேன். இன்றுவரை இது போன்ற சாட் மிக்ஸ் வேறு எங்கும் சாப்பிடவில்லை .எப்போதும் இவர் கடையில் கூட்டம் இருக்கும். சில சமயம் எட்டு மணிக்கு மேல் போனால் கிடைக்காது. நான் இந்த முறை அந்த தம்பியிடம் இந்த டேஸ்ட் இவ்வளவு வருடம் நான் சாப்பிட்டு உள்ளேன் இதே போல் நான் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்தேன். சாப்பிட்ட டேஸ்ட் வைத்து எப்படி செய்து இருப்பார் என்று கணித்து அதேபோல் செய்து அவருக்கும் ஒரு பாக்ஸில் கொண்டு போய் கொடுத்தேன் அந்த தம்பி பாராட்டினார். இன்று வரை இந்த டேஸ்ட் வேறு எந்த சாட் கடையிலும் கிடைத்ததில்லை.

சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவே காய்ந்த பச்சை பட்டாணி அல்லது வெள்ளை பட்டாணியை ஊற வைத்துக் கொள்ளவும்.(மாலையில் தான் செய்யப்) மறு நாள் மாலையில் ஊற வைத்த பட்டாணியை மீண்டும் ஒருமுறை கழுவி விட்டு அதனுடன் இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து எட்டு சவுண்ட் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்போது வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை பொடியாக நறுக்கி குக்கரில் வேக வைக்கவும்.
- 2
நறுக்கி வைத்தவெங்காயம்+ மற்றவற்றை சோம்பு கிராம்பு பட்டை புதினா தலை சேர்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு சுண்ட வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பிறகு இதில் மிளகாய் தூள் சாம்பார் தூள் மஞ்சள் தூள் உப்பு தனியாத்தூள் சீரகத்தூள் மற்றும் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
- 3
பட்டாணி தண்ணீரை வதக்கிய விழுதில் சேர்த்து திறந்து வைத்து குறைந்தது பத்து நிமிடம் கொதிக்க விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும். வேக வைத்த பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும். பட்டாணியை நன்றாக மசித்து கொள்ளவும். முழு பட்டாணி கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பத்து நிமிடம் கொதித்த மசாலா கலவையில் பட்டாணி உருளைக்கிழங்கு மற்றும் முழு பட்டாணி பீட்ரூட் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
மீண்டும்மிதமான தீயில் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். தேவை என்றால் மிக்ஸி கழுவிய தண்ணீர் அல்லது பட்டாணி தண்ணீர் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும். ஒன்றரை கப் பட்டாணிக்கு மூன்று கப் வரை தண்ணீர் விட்டு வேக வைக்கலாம். தண்ணீர் பத்தவில்லை என்றால் மிக்ஸி கழுவியை தண்ணீர் வைத்துக் கொள்ளவும்..
- 5
இவை அனைத்தும் நன்கு ஒன்று சேர்ந்து கொதித்த உடன் அடுப்பை நிறுத்திவிட்டு கொத்தமல்லி தழை தூவிக் கொள்ளவும். ரொம்ப கெட்டியான கலவையாக செய்ய வேண்டாம். கடைசியாக சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பரிமாறும் போது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி தழை மற்றும் பாணி பூரி புளித் தண்ணீர் வேண்டுமென்றால் ஒரு பிளேட்டிற்கு ஒரு ஸ்பூன் தயிர், பாணி பூரி இரண்டு நொறுக்கியது சேர்த்து கலந்து பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும் இந்த சேட்டு கடை மிக்ஸ் மசாலா. ஒருமுறை செய்து பாருங்கள்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்