செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)

#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது..
செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)
#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு மிளகாய் வற்றலையும் எடுத்து தண்ணீரில் போட்டு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்..
- 2
நன்றாக ஊறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதிக அளவு தண்ணீர் சேர்க்கக்கூடாது சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்..
- 3
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும் பூண்டின் அளவைவிட இஞ்சியின் அளவு குறைவாக இருக்க வேண்டும்..
- 4
இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் அதனுடன் நாம் அரைத்து வைத்த மிளகாய் வற்றலையும் சேர்க்கவும் அதனுடன் மிக்ஸியை லேசாக அலசி தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும் அதிகமாக சேர்த்தால் அது வெந்து சுருண்டு வருவதற்குள் ருசி மாறிவிடும்..
- 5
மிளகாய் பேஸ்ட் நன்றாக வதங்கி சுருண்டு வந்த பிறகு சர்க்கரை, உப்பு, சாஸ், மிளகுத்தூள், வினீகர் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து விடவும்..
- 6
இது அதிக நேரம் கொதிக்க தேவையில்லை இரண்டு நிமிடம் கொதித்தால் போதுமானது.. தண்ணீர் வற்றி சுருண்டு வந்தால் போதும்..
- 7
இறுதியாக அடுப்பை அணைத்தவுடன் சூட்டிலேயே ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து விடுவார்கள் ஓட்டலில்.. அதுதான் இதன் கலரின் ரகசியம்..
- 8
இப்போது அருமையான காரசாரமான செஷ்வான் சாஸ் தயார்..
Similar Recipes
More Recipes























கமெண்ட்