சட்டி கருணைக் கிழங்கு கார குழம்பு

அந்த காலத்தில் சட்டியில் தான் உணவுகளை செய்வார்கள். உணவு சுவை மட்டும் அல்லாமல் ஆரோக்கியம் கொண்டதாக இருக்கும்.அதனால் இன்று பிடிக் கருணை கிழங்கை சட்டியில் கார குழம்பு செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.
சட்டி கருணைக் கிழங்கு கார குழம்பு
அந்த காலத்தில் சட்டியில் தான் உணவுகளை செய்வார்கள். உணவு சுவை மட்டும் அல்லாமல் ஆரோக்கியம் கொண்டதாக இருக்கும்.அதனால் இன்று பிடிக் கருணை கிழங்கை சட்டியில் கார குழம்பு செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் உரித்து வைத்துக் கொள்ளவும். மூன்று பழுத்த தக்காளியை பொடியாக அறிந்து கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள், வரமிளகாய் தூள், சாம்பார் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இப்போது மண்சட்டியை அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் அதில் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
- 2
பூண்டு சிறிய வெங்காயத்தை அம்மியில் நன்கு தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். தாளிப்பு சாமான்கள் பொ ரிந்தவுடன் அதில் பூண்டு வெங்காயம் (தட்டிய) சேர்த்து கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கரைத்த புளி தண்ணீரில் நன்கு கரைத்த தக்காளியை சேர்க்கவும்.தக்காளி மசியவில்லை என்றால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். புளி நீர் தக்காளி விழுதுடன் மஞ்சள் தூள் சாம்பார் தூள் கொத்தமல்லி தூள் சாம்பார் மிளகாய் தூள் உப்பு கறிவேப்பிலை சேர்த்து கைகளால் கரைத்து விட்டுக் கொள்ளவும்.
- 3
இதற்கிடையில் குக்கரில் மூன்று அல்லது நான்கு பிடி கருணைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூன்று அல்லது நான்கு சவுண்ட் விட்டு வேகவைத்து எடுக்கவும். ஆரிய பிறகு தோலை உரித்து கத்தியில் சதுரமாக கட் செய்து கொள்ளவும் படத்தில் காட்டி உள்ளபடி. இதை வணங்கிய வெங்காய பூண்டுடன் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும். கரைத்த புளி தக்காளி தண்ணீரை இதில் ஊற்றி தேவை என்றால் உப்பு சிறிது சேர்த்து ஏழு எட்டு நிமிடம் வரை சட்டியை மூடி வேக விடவும்.
- 4
கடைசியாக பச்சைக் கருவேப்பிலை குழம்பில் சேர்த்துக் கொள்ளவும். தங்களுக்கு தேவை என்றால் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சுவையான பிடிக்கரணை கார குழம்பு தயார்.சட்டியில் செய்ததால் சுவையும் மணமும் அற்புதமாக இருந்தது. அப்பளம் வடகம் அப்பள பூ ஏதோ ஒன்று பொறித்துக் கொள்ளவும்.
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)