*குக்கும்பர் லஸ்ஸி* (சம்மர் ஸ்பெஷல்)

வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். இதில் இரும்பு, கால்ஷியம், குளோரின் போன்றச் சத்துக்கள் அதிகம் உள்ளது.
*குக்கும்பர் லஸ்ஸி* (சம்மர் ஸ்பெஷல்)
வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். இதில் இரும்பு, கால்ஷியம், குளோரின் போன்றச் சத்துக்கள் அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெள்ளரிக்காயை சுத்தம் செய்து தோலை சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 3
பெரிய மிக்ஸி ஜாரில், வெள்ளரிக்காயை போடவும்.
- 4
அடுத்து, உப்பு, கடைந்த தயிரை சேர்க்கவும்.
- 5
பிறகு சர்க்கரையை சேர்க்கவும்.
- 6
அனைத்தையும் நன்கு அரைக்கவும்.
- 7
கிளாஸ் டம்ளர்களில், முதலில் வெள்ளரி துண்டுகளை போடவும்.
- 8
பின், அரைத்ததை ஊற்றி, மேலே வெள்ளரி துண்டுகளை போடவும்.
- 9
அலங்கரிக்க வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தட்டை சுற்றி வெள்ளரி துண்டுகளை வைத்து, நடுவில் கிளாஸ் டம்ளர்களை வைத்து, மேலே, 2 வெள்ளரி துண்டுகளை சொறுகவும்.
- 10
இப்போது, ஹெல்தியான, சுவையான, சுலபமான,*குக்கும்பர் லஸ்ஸி*தயார். சம்மருக்கு இந்த ரெசிபியை செய்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்