Garlic Rice
சத்துமிகுந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டை உரித்துக் கொள்ளவும்.தக்காளி, மல்லி தழை,புதினா,லெங்காயம் கட் பண்ணிக்கொள்ளவும்.
- 2
சீரக சம்பா அரிசியை தனியாகவேக வைத்து ஒரு வடிதட்டில் வடித்துக்கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் நெய் 1 ஸ்பூன் ஊற்றி பூண்டுப்பல் போட்டுவதக்கவும்.பின் வரமிளகாய், கருவேப்பிசேர்த்துவதக்கவும்.முந்திரிபருப்பைச் சேர்க்கவும்.
- 4
இவற்றை ஆறியதும் கொரகொரப்பாக அரைக்கவும்.பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுத்துசுத்தி எடுத்துக்கொள்ளவும்..வேறு வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய்,நெய்சேர்த்து ஊற்றவும். கட் பண்ணிய வெங்காயம் போட்டுவதக்கவும்.அரைத்த பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- 5
கட் பண்ணியதக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதக்கியதும் அரைத்ததைச் சேர்க்கவும்
- 6
கட்பண்ணிய மல்லிதழை,புதினா,தேவையான உப்பு சேர்க்கவும்.ஒன்று போல் வதக்குபட்டதும் வடித்த சாதத்தைச்சேர்க்கவும்.
- 7
நன்கு கலந்து விடவும்.சுவையான Garlic Rice ரெடி.பப்படம்வைத்து சாப்பிடவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்