டூயல் டோன் ஜாமூன்

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
எளிதாக செய்ய ஒரு பலகாரம்
"டூயல் டோன் ஜாமூன்"
டூயல் டோன் ஜாமூன்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
எளிதாக செய்ய ஒரு பலகாரம்
"டூயல் டோன் ஜாமூன்"
சமையல் குறிப்புகள்
- 1
குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.
- 2
சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான உருண்டை அல்லது நீள உருண்டை வடிவில் ஒரு பாதியை உருண்டை பிடித்து வையுங்கள். இன்னொரு பாதியை ரோஸ் எசென்ஸ் கொண்டு சிறிய உருண்டைகளாக பிடித்து வையுங்கள்.
- 3
கொழுக்கட்டையில் பூரணம் சேர்ப்பது போல். வழக்கமான ஜாமூனுள் இந்த பிங்க் ஜாமுன் உருண்டைகளை சேர்த்து நன்கு உருட்டிக்கொள்ளவும்.
- 4
வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
- 5
மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய்யில் பாதியை ஊற்றி அதில் உருண்டைகளைப் போட்டு மரக்கரண்டியைக் கொண்டு திருப்பிக் கொண்டே இருங்கள்.
அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.
- 6
உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
- 7
சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.
சுவையான "டூயல் டோன் ஜாமூன்" தயார்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்