வாழைப்பூ வடை

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
வாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
வாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை ....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
வாழைப்பூவை நரம்பு நீக்கி, கருக்காமல் இருக்க மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்
- 3
வாழைப்பூவை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். அல்லது மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளலாம்
- 4
பின்பு பருப்பை நன்றாக தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பருப்பு மிகவும் மைய அரைத்து விட கூடாது.
- 5
அரைத்து வைத்த கலவையில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மல்லி இலை சேர்த்து நன்றாக பிசையவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சிறிய சிறிய வடையாக தட்டி பொறித்து எடுக்கவும்.
- 7
சுவையான சத்தான வாழைப்பூ வடை தயார்
Similar Recipes
More Recipes




கமெண்ட்