சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு நன்றாக கழுவி ஒன்றாக ஐந்து கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரில் முன்று விசில் அடித்து எடுக்கவும்
- 2
இதன் இடையில் கடலைப்பருப்பு, உளுந்து, வற்றல் மிளகாய், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பெருஞ்சீரகம், தேங்காய் துருவல், மல்லி சிறிதாக நிறம் மாறும் வரை வாட்டவும்
- 3
சுடாறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்து எடுக்கவும்
- 4
ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை சிறிதாக வாட்டி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்
- 5
பொடித்து வைத்த பொடியுடன், கரைத்த புளி தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்யவும், பின்னர் காய்கறி கலவையில் சேர்க்கவும்
- 6
இதனுடன் வேகவைத்த சாப்பாடு பருப்பு கலவை இதனுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, உப்பு, கறிவேப்பில்லை வேண்டிய அளவு சேர்த்து சிறிய தீயில் வைத்து வேகவைக்கவும்
- 7
நன்றாக வெந்து கழிந்ததும், சின்ன வெங்காயம், முந்திரி, உலர்ந்த திராட்சை நெயில் தாளித்து பிஸிபேலாபாத்தில் கொட்டவும்
- 8
சுவையான பிஸிபேலாபாத் அப்பளம் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்
Similar Recipes
More Recipes














கமெண்ட்