பள்ளி வாசல் நோன்பு கஞ்சி

இஸ்லாமிய இல்லங்களில் நோன்புகலத்தில் செய்யும் அருமையான் அரிசி பருப்பு சேர்த்த கறி கஞ்சி. பள்ளிவாசல்களில் செய்வது போல அருமையான் நோன்பு கஞ்சி
பள்ளி வாசல் நோன்பு கஞ்சி
இஸ்லாமிய இல்லங்களில் நோன்புகலத்தில் செய்யும் அருமையான் அரிசி பருப்பு சேர்த்த கறி கஞ்சி. பள்ளிவாசல்களில் செய்வது போல அருமையான் நோன்பு கஞ்சி
சமையல் குறிப்புகள்
- 1
நொய் அரிசி,பாசிபருப்பு,கடலை பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊறவைத்த அரிசி பருப்பு வகைகளை சேர்த்து வேகவிடவும். மேலும் அதில் பொடியாக அரிந்த கேரட், வெங்காயம், பொடியாக அரிந்த பூண்டு,தக்காளி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும், அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். - 2
தனியாக இன்னொரு பேனில் எண்ணை, நெய் காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து வெங்காயம், சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்து கொத்துமல்லி புதினா கேரட், கீமா, சேர்த்து வதக்கி வேகவைக்கவும், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்,அடுத்து தயிர்,பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி 10 நிமிடம் வேகவைக்கவும்.
- 4
வெந்ததும் கொதித்து கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும். சுவையான பள்ளி வாசல் நோன்பு கஞ்சி ரெடி.
Similar Recipes
More Recipes






கமெண்ட்