பாலக் பனீர் தோசை & Chappathi

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்.
- 2
செய்முறை
கீரை பொடியாக நறுக்கி அலசி தண்ணீரை வடித்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைகொதிக்கவிட்டு அதில் ஒரு
சிட்டிக்கை ஆப்ப சோடாமற்றும் கீரையை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டுஇரக்கதண்ணீரை வடித்து கீரையை ஆறவிட்டு, வெந்தகீரையுடன் பச்சமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனை சூடாக்கி பட்டர் +எண்ணை சேர்த்து
பனீருடன் சிறிது அரை தேக்கரண்டிமிளகாய் தூள் உப்பு சேர்த்து பொரித்து எடுத்துதனியாகவைக்கவும்.
- 3
அதே வானலியில் சீரகம் தாளித்து, அரைத்தவெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள பாலக், பச்சமிளகாயைசேர்த்த்து வதக்கவும். - 4
அடுத்து தயிர், கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்புதூள், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்குகிளறி 5 நிமிடம் வேக விட்டு கடைசியாக பொரித்துவைத்துள்ள
பனீரை சேர்த்து மேலும் 3 நிமிடம் கொதிக்க வைத்துஇரக்கவும். - 5
ஜலீலா”ஸ் டிப்ஸ் : இதை ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி, உடன் சாப்பிடுவதை விட தோசையுடன் சாப்பிட்டால் ய்ம்மியாக இருக்கும். தோசையுடன் மசாலா தோசைபோல செய்ய இந்த கிரேவியில் அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக செய்யவும்.
- 6
பாலக் பனீரை நன்கு ஆறவைத்து, மொருகலாக தோசை வார்த்து அதில் பாதியளவு தேவையான பாலக் பனீரை வைத்து மடிக்கவும். பூரியுடனும் சேர்த்து சாப்பிடலாம் சான்ட்விச் போல பிள்ளைகளுக்கு பள்ளி கொடுத்து அனுப்பலாம், பயணத்துக்கும் எடுத்து செல்லலாம்.
Similar Recipes
More Recipes







கமெண்ட்