இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா

#குழந்தைகள்டிபன்ரெசிபி
இனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம்
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபி
இனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 1 கப் பாஸ்தா அதில் சேர்த்துக் கொள்ளலாம்
- 2
7 நிமிடம் விடவும் பிறகு பாஸ்தா நன்றாக வெந்தவுடன் உடனடியாக ஒரு பில்டர் மூலமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த காய்கறி வேணுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம் கேரட் பீன்ஸ் ஸ்வீட் கார்ன் வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு எடுத்துக்கொண்டேன்
- 4
ஒரு பேனில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சிறிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளலாம்
- 5
வெங்காயம் இஞ்சி பூண்டு நன்றாக வதங்கிய உடன் ஒரு சிறிய தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்
- 6
குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகள் கேரட் பீன்ஸ் அத்துடன் சிறிதளவு உப்பு 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்
- 7
காய்கறிகள் நன்றாக வதங்கிய பின், டொமேட்டோ கெட்சப் 2 ஸ்பூன், சோயா சாஸ் 1/2 ஸ்பூன், சில்லி சாஸ் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 8
பிறகு வேக வைத்திருந்த மக்ரோனி பாஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடலாம்
- 9
இப்போது மிகவும் சுவையான இந்திய முறையில் மக்ரோனி பாஸ்தா தயாராகிவிட்டது குழந்தைகளுக்கு விருப்பமான ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து அவர்களுக்கு கொடுக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்