சமையல் குறிப்புகள்
- 1
புதினா இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்
- 2
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய்,நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்த்து புதினா இலைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆற விடவும்.
- 3
ஆறியவுடன் உப்பு, புளி, தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் ரொம்ப நைஸாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். சட்னி தயார். இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
- 4
குறிப்பு: மஞ்சள் பொடி சேர்ப்பதால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9172463




கமெண்ட்