குட்டி பன் கீமா சாண்ட்விச்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.முதலில் கீமாவை கழுவி அதில் இஞ்சி பூண்டு,உப்பு,மஞ்சள் தூள், உப்பு போட்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து நன்கு சுருட்டி கொள்ள வேண்டும்.தண்ணீர் முழுவதும் வற்ற வேண்டும்.
- 2
முட்டையுடன் சுருட்டி வைத்துள்ள கீமா, மிளகு தூள்,உப்பு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். (முட்டை முழுவதும் கீமாவில் சேரும் படிகலக்கி கொள்ளனும்.)
- 3
குட்டி பன்னை இரண்டாக வெட்டி லேசாக பட்டர் தடவி போனில் போட்டு கருகாமல் சிவற எடுத்து கொள்ளவேண்டும்
- 4
கலக்கி வைத்துள்ள கீமா முட்டையை குட்டி குட்டியாக பன் சைஸுக்கு ஊற்றி (எண்ணை + பட்டர் கலந்து பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது பன்னும், முட்டைகளும் தயார்.இப்போது அவரவர் விருப்பபடி கெட்சப் (அ) புதினா சட்னியை பன்னின் இரு புறங்களிலும் தடவி முட்டையை நடுவில் வைத்து சாப்பிடவும். சுவையான குட்டி பன் சாண்ட்விச் ரெடி
Similar Recipes
More Recipes








கமெண்ட்