கேரட் தேங்காய் லட்டு

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
வழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம்
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
வழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சிறிதாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இரண்டு கேரட்டை நன்றாக துருவி எடுத்து கொள்ளலாம், ஒரு பேனில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய வைத்திருந்த கேரட் சேர்த்துக் கொள்ளலாம்
- 3
கேரட்டை நெய்யில் வதக்கிய பிறகு 1/4 கப் சர்க்கரை சேர்த்து கொள்வோம்
- 4
பிறகு துருவிய காய்ந்த தேங்காய் 1/4 கப் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது துருவிய தேங்காயை சிறிதளவு வறுத்து அதை சேர்த்துக் கொள்ளலாம்
- 5
மூன்று ஏலக்காய் எடுத்து கொள்வோம் அதை நன்றாக இடித்து கொள்ளலாம், ஏலக்காய் வாசம் மேலும் சுவையை தூண்டும்
- 6
3 ஸ்பூன் பால் சேர்த்து கொள்வோம் மற்றும் வறுத்து வைத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறிக் கொள்ளவும்
- 7
மிதமான சூட்டில் இருக்கும்போதே லட்டு செய்து கொள்ளலாம், அனைத்து லட்டுவின் மேல் ஒரு பாதாம் வைத்து அலங்கரித்து கொள்ளவும்
- 8
இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான கேரட் தேங்காய் லட்டு தயார் ஆகி விட்டது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
Similar Recipes
More Recipes


















கமெண்ட்