பிடி கொழுக்கட்டை உப்புமா கொழுக்கட்டை

பிடி கொழுக்கட்டை உப்புமா கொழுக்கட்டை
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை 1.
பச்சரிசியையும் துவரம்பருப்பையும் மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டு பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி பருப்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைத்து க் கொள்ளவும்.
அல்லது - 2
செய்முறை 2. அரிசி பருப்பு இரண்டையும் மாவு மிஷினில் கொடுத்து ரவை பதத்தில் உடைத்து வைத்துக் கொள்ளலாம்.
- 3
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாயை கிள்ளி போடவும். கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்க்கவும்.
- 4
இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் துருவல் சேர்க்கவும். உப்பை சேர்க்கவும்.
- 5
அடுத்து உடைத்த அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கெட்டியாக வரும் வரை கிளறவும். உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.
- 6
அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
- 7
ஆறியவுடன் படத்தில் உள்ளபடி உருட்டி இட்லி தட்டில் வைத்து இட்லி குக்கரில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து வைக்கவும். கொழுக்கட்டை ரெடி. சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes






கமெண்ட்