வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரிந்த வெங்காயம் தக்காளி வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்
- 2
பின் தேங்காய் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்
- 3
எல்லாம் வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சூடு ஆறின பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
இரண்டு முட்டைகளை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுது களை சேர்க்க வேண்டும்
- 6
இரண்டு டம்ளர் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
- 7
பின் முட்டைகளை நான்கு துண்டுகளாக அறிந்து குருமாவில் சேர்க்கவேண்டும்
- 8
எல்லாம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். சுவையான முட்டை குருமா தயார். மேலே கஸ்தூரி மேத்தி தூவவேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11034475











கமெண்ட்