எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)

எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு தாளிக்கவும்
- 3
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 4
எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
- 5
சாதத்தை ஆற வைத்து இதனுடன் சேர்த்து கிளறவும்
- 6
ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
- 7
கேரட்டைத் துருவிக் கொள்ளவும்
- 8
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய், நெய் சேர்த்து சூடுபடுத்தவும்
- 9
பட்டை லவங்கம் அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 10
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
- 11
இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து வதக்கவும்
- 12
எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்