ஸ்பைசி தினை சேமியா (Spicy thinai semiya recipe in tamil)

குடும்பத்தில் அனைவரும் விரும்பும் வகையில் செய்யப்படும் ஒரு எளிய ஆரோக்கியமான காலை உணவு.
#harini
ஸ்பைசி தினை சேமியா (Spicy thinai semiya recipe in tamil)
குடும்பத்தில் அனைவரும் விரும்பும் வகையில் செய்யப்படும் ஒரு எளிய ஆரோக்கியமான காலை உணவு.
#harini
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் 3/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதில் தினை சேமியாவை 2 நிமிடம் ஊற வைத்து இட்லிதட்டில் 8 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சேமியாவை உதிரிஉதிரியாக உதிர்த்து வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும், இஞ்சி, முந்திரியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளவும்.
- 3
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 1/4 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் முந்திரி, இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- 5
தூள் வகைகள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் வேக வைத்த தினை சேமியாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- 6
கடைசியாக தேங்காய் துருவல், புதினா சேர்த்து கலந்து விட்டு சூடாக பரிமாறவும்.
- 7
ஆரோக்கியமான எளிதில் செய்ய கூடிய சுவையான ஸ்பைசி தினை சேமியா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்