ராஜஸ்தான் டால்டோக்ளி (Dhaldokli Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவையும், கடலை மாவையும் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
ஒரு குக்கரில் மூன்று டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 5
தண்ணீர் கொதித்ததும் துவரம்பருப்பை சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வரும் வரை பருப்பை வேக விடவும்.
- 6
பிசைந்து வைத்த கோதுமை மாவை சற்று தடியாக திரட்டி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க விட்டு தண்ணீர் கொதித்ததும் அதில் வெட்டி வைத்துள்ள கோதுமை மாவு துண்டுகளை சேர்க்கவும்.
- 8
அது வெந்து மேலே வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- 9
நாம் வேக வைத்துள்ள பருப்பை இந்த வெந்த கோதுமை மாவு துண்டுகளுடன் சேர்த்து கொத்தமல்லி தழை தூவவும்.
Similar Recipes
More Recipes






கமெண்ட்