Quinoa Khichdi 🍲

#nutrient1
இதில் அதிகளவு புரோட்டீன் மற்றும் 10 அமினோ அமிலங்கள் உள்ளது. வெஜிட்டேரியன் பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
Quinoa Khichdi 🍲
#nutrient1
இதில் அதிகளவு புரோட்டீன் மற்றும் 10 அமினோ அமிலங்கள் உள்ளது. வெஜிட்டேரியன் பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியைவிட Quinoa வில் அதிக புரத சத்து உள்ளதால் வாரம் 2 முறை எடுத்துக் கொள்வது சிறந்தது.
- 2
Quinoa வை ஜல்லடை உபயோகித்து அலம்பிக் கொள்ளவும். 1 கப் quinoa வில் 2.5 கப் தண்ணீர் சேர்த்து கடாயில் வேகவைக்கவும். தண்ணீர் கொதி வரும் பொழுது மூடி வைத்து வேக வைக்கவும். பத்து நிமிடத்தில் உதிரியாக தண்ணீர் வற்றி நன்கு வெந்து விடும்.
- 3
தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தக்காளி,கேரட்,பீன்ஸ் & பச்சைப் பட்டாணி இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி, தேவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 5
Quinoa வை வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து நன்கு வதக்கி அடி பிடிக்காமல் 5 நிமிடம் மூடிவைத்து வேகவைத்து எடுக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்