பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)

#arusuvai1
பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல்
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1
பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 1மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி எடுத்து கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
- 2
அரிசி மாவில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
- 3
அவற்றை வாழை இலையில் ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றி தேய்த்து விட்டு வாழை இலையை சுருட்டி கொள்ளவும்.
- 4
அவற்றை வாழை நாரில் கட்டி,இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- 5
பின் அவற்றை எடுத்து கத்தியால் கட் செய்து வைத்து கொள்ளவும். இப்பொழுது பாலாட தயார்.
- 6
அவற்றை தண்ணீரில் அலசி எடுத்து உலரவைத்துக் கொள்ளவும்.
- 7
பின் அடுப்பில் பாத்திரம் வைத்து நெய் விட்டு முந்திரி,திராட்சைகளை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 8
தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.முதல் எடுத்து தேங்காய் பாடலுடன் 1கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- 9
சர்க்கரை சேர்த்து கொள்ளவும். நன்றாக கொதித்ததும் பாலாடயை சேர்த்து கொதிக்க விட்டு வேகவைக்கவும்.
- 10
பின் எடுத்து வைத்துள்ள இரண்டாவது தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விட்டு வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.
- 11
சுவையான பாலாட கேரளா பாயாசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
- ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
- தேனும் தினையும் / Foxtail Ladoo (Thenum thinaiyum recipe in tamil)
- மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
- சாமைஅரிசி தேங்காய் பால்பர்பி (Saamai arisi thenkaai paal burfi recipe in tamil)




கமெண்ட் (2)