பீச் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)

பீச் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை இரவு முழுதும் ஊறவிடவும்
- 2
ஒரு குக்கரில் 5 விசில் விட்டு எடுக்கவும்
- 3
ஒரு கடாயில் என்னைவிட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்
- 5
அத்துடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணிர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்
- 7
அத்துடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்
- 8
கடைசியாக மல்லி இலை தூவி இறக்கவும்
- 9
பரிமாறுவதற்கு :
ஒரு பாதிரத்தில் சிறிது பட்டாணி கலவை பின் நறுக்கிய வெங்காயம் பின் உடைத்த பூரி அல்லது தட்டை பின் பட்டாணி கலவை நறுக்கிய மாங்காய் பின் வெங்காயம் பட்டாணி கலவை வெங்காயம், தேங்காய்,நறுக்கிய மாங்காய் இறுதியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து பரிமாறவும் - 10
குறிப்பு : இந்த பட்டாணி கலவையை உருளைக்கிழங்கு சமோசா உடனும் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்