ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் பருப்பு விகிதத்தில் எடுத்து களைந்து இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 4 விசில் விட்டு எடுக்கவும்
- 2
நன்கு வெந்த சாதத்தை கரண்டி வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும் மசாலா பொருட்களுக்கு தேவையானது இப்போது அழைக்கலாம் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் கடலைப் பருப்பை வறுத்து கொள்ளவும் அதன் பிறகு அதில் சீரகம் மிளகு உளுந்தம் பருப்பு சோம்பு வெந்தயம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும் கடைசியாக தேங்காய் பூவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் சிறிது நேரம் ஆற விட்டு அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
இன்னொரு கடாயில் என்னை விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதன் பின்னர் காய்கறி மற்றும் தக்காளி ஒன்றாக சேர்க்கவும் நன்கு வதங்கி வரும் பொழுது அதில் சாம்பார் தூள் மஞ்சள் தூள் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்
- 4
காய்கறிகளை மூடிபோட்டு நன்கு வெந்தபிறகு புளி கரைசலை அதில் சேர்க்கவும் ஒரு கொதி வந்த பிறகு மசித்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும் கட்டியில்லாமல் நன்கு கிளறி எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் நெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை வரமிளகாய் வதக்கி அதில் சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் 5 நிமிடம் மூடி போட்டு மூடி கொள்ளவும் இப்போது இருக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நெய் விட்டு பச்சை கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும் இப்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (4)