ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️

#hotel
ஹோட்டலில் மதிய சாப்பாட்டிற்கு தரப்படும் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் இது. காய்கறிகள் நிறைந்த சுவையான மணமான சாம்பார் இனி நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️
#hotel
ஹோட்டலில் மதிய சாப்பாட்டிற்கு தரப்படும் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் இது. காய்கறிகள் நிறைந்த சுவையான மணமான சாம்பார் இனி நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் வெந்தயம், 5 கஷ்மிரி மிளகாய் 2 ஸ்பூன் தேங்காய் துருவல் ஒரு இனுக்கு கருவேப்பிலை வறுக்க எடுத்து வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்துக் கொள்ளவும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது அரை கப் துவரம்பருப்பை கழுவி ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 4 சவுண்ட் விட்டு வேகவிடவும். எடுத்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் கேரட் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு படத்தில் காட்டியுள்ளபடி அறிந்து கொள்ளவும். பதினைந்து சிறிய வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். 1தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதங்கியவுடன் காய்கறிகளை ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 சவுண்ட் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
காய்கள் வெந்தவுடன் இப்போது வேக வைத்த பருப்பை சேர்த்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு கொதி வரும்வரை கொதிக்கவிடவும். கரைத்து வைத்த புளித்தண்ணீரை குழம்பில் சேர்க்கவும் மீண்டும் ஒரு கொதி விடவும். பிறகு மிக்ஸியில்அரைத்து வைத்த சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
இப்போது தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடான பிறகு, ஒரு ஸ்பூன் கடுகு 2 வரமிளகாய் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுடச்சுட சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
-
-
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil
More Recipes
கமெண்ட் (2)