ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு பச்சை மிளகாய் வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் இஞ்சியை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் சேமியா உடன் தயிர் இஞ்சித் துருவல் பொடியாக நறுக்கிய பூண்டு சீரகம் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
சேமியா நன்கு ஊறி வந்த பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவையும் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது தோசைக்கல்லில் கலக்கிய மாவை தோசை போல் ஊற்றி மேலே ஆப்பாயில் போல் முட்டையை உடைத்து ஊற்றவும் என்னை விட்டு தீயை மிதமான சூட்டில் வைத்து தோசை கல்லை மூடி போட்டு மூடி வைக்கவும் அரை நிமிடம் கழித்து திறந்து ஆபாயில் உடையாமல் அலுங்காமல் எடுக்கவும் ஆப்பாயில் மேலே தேவைப்பட்டால் உப்பு மற்றும் பெப்பர் தூள் சேர்த்துக் கொள்ளலாம் இதற்கு சாஸ் இணையான டிஷ் ஆகும் இப்போது சுவையான ஸ்பைசி சேமியா ஆப்பாயில் தோசை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட் (2)