தேங்காய் பிஸ்கட்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு 5 முதல் 10 நிமிடம் அடித்துக் கொள்ளவும். அதன்பின் மைதா மாவு கோதுமை மாவு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீரோ பாலோ சேர்க்க தேவையில்லை). பின் அதனை 10 முதல் 12 உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும்.
- 2
பிடித்த உருண்டைகளை லேசாக தட்டி அதனை தேங்காய்த்துருவல் கலவையில் பிரட்டி எடுத்து அதன் நடுவில் உடைத்த பாதாமை வைத்து அலுமினியம் பாயில் சீட்டால் சுற்றப்பட்ட தட்டில் பரப்பி வைக்கவும். (தட்டில் 5 முதல் 6 பிஸ்கட்கள் மட்டுமே வைக்கவும்)
- 3
ஒரு கடாயில் நடுவில் ஸ்டாண்ட் வைத்து மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் பீரிஹீட் செய்துகொள்ளவும். அதன்பின் பிஸ்கட் அடுக்கி வைத்துள்ள தட்டை வைத்து மூடி மிதமான சூட்டில் 20 முதல் 30 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். 30 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிஸ்கட் ஆறியவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான கோக்கனட் பிஸ்கெட் தயார்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்