வெஜிடபிள் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் மற்றும் பிரிஞ்சி இலை தாளித்து அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். அதன் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி கரையும் அளவிற்கு நன்றாக வதக்கவும்.
- 2
அதன் பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும். காய்கறி வழங்குவதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் கசகசா முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.இப்பொழுது அரைத்த விழுதை காய்கறி கலவையில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
இப்பொழுது இறுதியாக காய்ச்சி ஆறவைத்த பால் கால் கப் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தலை தூவி அடுப்பை அணைக்கவும்.சுவையான காய்கறி குருமா தயார் இதனை இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா மற்றும் இடியாப்பத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்