செட்டிநாடு மட்டன் Gravy
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் கடுகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்
- 3
தேங்காய் வதங்கிய உடன் அந்த கலவையை அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு அன்னாசி மொக்கு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சிறிது சேர்த்து வதக்கவும் அதனுடன் மிளகாய் தூள் சோம்பு தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் நான்கையும் சேர்த்து வதக்கவும்
- 5
அதில் பின்னர் வேக வைத்த மட்டனை சேர்க்கவும், நன்றாக மசாலா கலங்கும் வரை வதக்கவும்
- 6
பின்னர் அரைத்து வைத்த தேங்காய் கலவை சேர்த்து கொதிக்க விடவும்
- 7
தேங்காய் கலவை வாசம் போகும் வரை கொதிக்க வைத்து கருவேப்பிலை கொத்தமல்லி இறக்கும்போது சேர்த்து பரிமாறவும்
- 8
சுவையான செட்டிநாடு மட்டன் மசாலா கிரேவி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட் (2)