சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் பூண்டு இவற்றை வைத்துக்கொள்ளவும். தக்காளி பச்சை மிளகாய் வற்றல் நறுக்கிக் கொள்ளவும். சிறு கடாயில் எண்ணெய் ஊற்றி பாதி சின்ன வெங்காயம் 2 தக்காளியை வதக்கிக் அரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம் சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் பூண்டு இவற்றை நன்கு வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கிய பின்னர் தனி மிளகாய் தூள் குழம்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் இவற்றை சேர்த்து வதக்கவும்
- 4
மசாலா வதங்கியவுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து வதக்கவும். சிறிது புளியை கரைத்துக் கொள்ளவும்.
- 5
தண்ணீர் ஊற்றி மசாலா கொதித்தவுடன் மீன் துண்டுகளை போடவும். மீண்டும் கொதி வந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
பத்து நிமிடம் நன்கு கொதித்தவுடன் தேங்காய் பால் பற்றி சில நிமிடம் கொதிக்க விடவும். சூடான சுவையான மீன் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்