பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)

#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஈஸ்ட் ஆக்டிவேட் செய்ய அரை கப் மிதமான சூட்டில் உள்ள பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலக்கிக் கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் இஸ்டை சேர்த்து கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
- 2
5 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அரை ஸ்பூன் உப்பு, நான்கு ஸ்பூன் பட்டர் இவற்றை கலந்து கொண்டு அதில் ஆக்டிவேட் செய்யப்பட்ட இஸ்டை ஊற்றீ மாவு பதத்திற்கு பிசையவும்.
- 3
பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் பசலைக்கீரையை அரைத்து கொள்ளவும்.
- 4
மாவு ஊறிய பின், ஒரு தட்டில் அதை வட்டமாக தேய்த்து வைக்கவும், ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூடி போட்டு 15 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும், வட்டமாக தேய்த்த பீட்சாவில் முள்ளு கரண்டியை வைத்து இடைவெளி விட்டு ஓட்டை போடவும்.
- 5
சூடாகிக் கொண்டிருக்கும் கடையில் பீட்சா தட்டை வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
- 6
பத்து நிமிடம் கழித்து பீட்சாவை வெளியே எடுத்து, ஏற்கனவே அரைத்து வைத்த பசலைக்கீரையை தடவவும்,
- 7
இதன் மீது தக்காளி சாஸ் வெட்டிய வெங்காயம் தக்காளி பூண்டு இவற்றை வைக்கவும். மேலும் மிளகுத்தூளை அதன் மீது தூவி விட்டு மீண்டும் கடாயில் 10 நிமிடம் வைக்கவும்.
- 8
பத்து நிமிடம் கழித்து வெளியே எடுக்கவும் டேஸ்டான ஸ்பினாச் பீட்சா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)