பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#bake #NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம்.

பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)

#bake #NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 3/4கப் மைதா
  2. 5டீஸ்பூன் தயிர்
  3. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 2டீஸ்பூன் தண்ணீர்
  6. 3டீஸ்பூன் பிஸ்சா சாஸ்
  7. 1/2பெரிய வெங்காயம்
  8. 1/2சிறிய தக்காளி
  9. 1/4குடை மிளகாய்
  10. 100கிராம் பன்னீர் துண்டுகள்
  11. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 1/2டீஸ்பூன் மல்லித்தூள்
  13. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  15. தேவையான அளவு உப்பு
  16. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் 3/4 கப் மைதா எடுத்து, 4 டீஸ்பூன் தயிர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.15 நிமிடம் நன்றாக மாவை ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் மாவை எடுத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அழுத்தமாக பிசைந்து சப்பாத்தி போல உருட்டவும்.அதன் மேலே போர்க் வைத்து எல்லா பக்கமும் துளைகள் போடவும்.

  3. 3

    3 டீஸ்பூன் பிஸ்சா சாஸை மேலே பரப்பவும்.1/2 வெங்காயம், 1/2 தக்காளி, 1/4 குடை மிளகாய் போன்றவற்றை நறுக்கி வைக்கவும்.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் தயிர், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வெட்டிய காய்கறிகள், 100 கிராம் பன்னீர் துண்டுகள் போட்டு மிக்ஸ் செய்து மாவின் மீது வைக்கவும்.

  5. 5

    4 பன்னீர் துண்டுகளை சீவி அதனை மசாலா மீது தூவவும்.இப்போது கடாயின் மீது ஸ்டாண்ட் வைத்து, ஒரு தட்டில் எண்ணெய் தடவி மாவை அதில் வைத்து கடாயை மூடி 20 நிமிடம் இதமான சூட்டில் பேக்கிங் செய்யவும்.

  6. 6

    20 நிமிடம் கழித்து சூடான பன்னீர் பிஸ்சா சுவைக்க தயார்.இதனை துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes