புட்டமுது

திருச்செந்தூர் முருகன் கோவிலில் புட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் புட்டமுதை பண்டிகை நாட்களில் செய்து இறைவனுக்குப் படைத்து இறைவன் அருள் பெறலாம்.
புட்டமுது
திருச்செந்தூர் முருகன் கோவிலில் புட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் புட்டமுதை பண்டிகை நாட்களில் செய்து இறைவனுக்குப் படைத்து இறைவன் அருள் பெறலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மாவை ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- 2
வறுத்த மாவை சற்று ஆறவைத்து சிட்டிகை உப்பு, தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்துப் பிசிறி வைக்கவும்.
- 3
பின்னர் கலந்த புட்டமுது மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
- 4
புட்டமுது வெந்ததும் ஆற வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.
- 5
வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்துப் பிசுக்கு பதம் வந்ததும் இறக்கி வேக வைத்த புட்டமுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
- 6
ஏலக்காயைப் பொடி செய்து புட்டமுதில் சேர்க்கவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் புட்டமுதில் சேர்க்கவும்.
- 7
இறைவனுக்குப் படைத்து அனைவருக்கும் கொடுத்து மகிழவும்.
Similar Recipes
More Recipes



















கமெண்ட்