குலாபி புட்டிங் (Kulaabi pudding recipe in tamil)

Shaqiya Ishak @cook_25647183
குலாபி புட்டிங் (Kulaabi pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடல்பாசியை நன்கு அலசி, தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
- 3
ஊற வைத்த கடல்பாசியை தண்ணீருடன் சேர்த்து கடல்பாசி கரையும் வரை கொதிக்கவிடவும்.
- 4
நன்கு கரைந்ததும், ஃபுட் கலர் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்து கலக்கவும்.
- 5
அதனுடன் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து கரைந்ததும், காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 6
கலவையை வடிகட்டி விருபத்திற்கேற்ற வடிவ மோல்ட்களில் ஊற்றி ஆறியதும், குளிர்சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.
- 7
2 மணி நேரம் களித்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி காய்ந்த ரோஜா இதழ்கள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
- 8
சுவையான குளு குளு ரோஸ் புட்டிங் தயார். செய்து சாப்பிட்டு, பரிமாறி மகிழுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13579102



கமெண்ட் (4)