கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.
#Kerala #photo

கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)

இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.
#Kerala #photo

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நாற்பது நிமிடங்கள்
  1. 1 கப் அரிசி மாவு
  2. 2 கப் வெல்லம்
  3. 4கப் தேங்காய் பால்
  4. 1/4 கப் முந்திரி, தேங்காய் துண்டுகள்
  5. 1/4 கப் நெய்
  6. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

நாற்பது நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் அரிசி மாவு, உருகிய வெல்லம் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து கலக்கவும். கலவை கெட்டியாக மாறும்.

  3. 3

    தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து பால் எடுத்துக்கொள்ளவும். முதல்பால், இரண்டாம் பால் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    அரிசி மாவு, வெல்லம் சேர்த்து கலந்துள்ள கலவையில், இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.கொஞ்சம் கெட்டியானதும், முதல் பால், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    கை விடாது கலந்துகொண்டே இருக்கவேண்டும். அவ்வப்போது நெய் சேர்த்து கலக்கவும்.பின் தேங்காய், முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

  6. 6

    மாவு நன்கு வெந்து ஓரங்கள் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி, பேக்கிங் ட்ரே அல்லது ஒரு கிண்ணத்தில் கொட்டி, இரண்டு மணி அப்படியே வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான, மிருதுவான கிண்ணத்தப்பம் சுவைக்கத்தயார்.

  7. 7

    Kinnathappam Dedicated to all my cookpad friends 😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes