வெங்காய பக்கோடா (Venkaaya pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள்
- 2
மஞ்சள் தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு உப்பு சேர்க்கவும்
- 4
முதலில் தண்ணீர் விடாமல் இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு சிறுக சிறுக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும் இவை பார்ப்பதற்கு கெட்டியாகவும், தண்ணியாக இருக்கக் கூடாது... கையில் தொட்டுப் பார்த்தால் பிசுபிசுவென இருந்தால் போதும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து தயாரித்து வைத்திருக்கும் வெங்காய பக்கோடாவை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 6
சுவையான இந்த வெங்காய பக்கோடாவை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13732987





















கமெண்ட் (8)