பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconut
பீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconut
பீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பிறகு துருவிய பீட்ரூட்டை அதில் போட்டு வதக்கவும்
- 2
ஈரப்பதம் போகும் வரை நன்றாக வதக்கவும் பிறகு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து வதக்கவும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து செய்யவும் மற்றும் அடிபிடிக்காமல் இருக்க கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்
- 3
தேங்காய் பாலுடன் சேர்த்து பீட்ரூட் வெந்து நன்றாக கெட்டியாகும் வரை வதக்கவும்
- 4
ஓரளவு கெட்டியானவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறவும் சர்க்கரையை சேர்த்து உடன் சிறிது தண்ணீர் விடும் கிளறிக் கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் நன்றாக கெட்டியாக வரும்
- 5
படத்தில் காட்டியுள்ளது போல கெட்டியாக வரும் வரை நன்றாக வதக்கவும்
- 6
பீட்ரூட் கலவையை நன்றாக ஆற வைத்து பிறகு உருண்டைகளாகப் பிடிக்கவும்
- 7
பிறகு துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலில் புரட்டி எடுத்தால் சுவையான பீட்ரூட் ஜாமூன் தயார்
- 8
ஆரோக்கியமான மற்றும் சுவையான பீட்ரூட் ஜாமூன் தயார் இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
- குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
- முருங்கை காய் பொரியல் (Murunkaikaai poriyal recipe in tamil)
- சாக்லேட் பாதாம் பேடா (Chocolate badam peda recipe in tamil)



















கமெண்ட் (3)