சிக்கன் மோமோஸ் (முட்டைகோஸ் இலை shape மற்றும் ரோஸ் shape)(Chicken momos recipe in tamil)

#cookforkids snacks
Week 1
சிக்கன் மோமோஸ் (முட்டைகோஸ் இலை shape மற்றும் ரோஸ் shape)(Chicken momos recipe in tamil)
#cookforkids snacks
Week 1
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் மைதாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
- 2
பாலக்கீரையை சூடான தண்ணீரில் போட்டு எடுத்து வடிகட்டி ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
- 3
ஒரு கப் மைதா மாவுடன் உப்பு பாலக் விழுது சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து வைக்கவும்.பிசைந்து வைத்த மாவுகளை அரை மணி நேரம் ஊற விடவும்.
- 4
கொத்திய சிக்கனை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 6
இதனுடன் விழுதாக அரைத்த சிக்கன், உப்பு,சோயா சாஸ்,மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது. சிக்கன் கலவை ரெடி.
- 7
முதலில் முட்டைகோஸ் இலைபோல் மோமோஸ் செய்ய பிசைந்து வைத்த மாவில் கொஞ்சம் எடுத்து தனித்தனியாக நீளமாக உருட்டி கொள்ளவும்.பச்சையாக உள்ள மாவினுள் வெள்ளை மாவை உள்ளே வைத்து roll பண்ணவும்.
- 8
ரோல் பண்ணிய மாவை சிறிய சிறியதாக கட் செய்து சப்பாத்தி போல தேய்க்கவும்
- 9
தேய்த்த மாவின் நடுவில் சிக்கன் கலவையை வைத்து ஒருபுறமாக மாவை சமோசா போல் மடிக்கவும்.முட்டைகோஸ் இலை வடிவில் மோமோஸ் ரெடி.
- 10
ரோஸ் போல செய்ய இரண்டு
கலர் மாவையும் சப்பாத்தி போல தேய்த்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அதன் நடுவில் சிக்கன் கலவையை வைத்து ரோல் பண்ணவும். - 11
ரோஸ் மோமோஸ் ரெடி
- 12
செய்து வைத்த மோமோஸ்கலை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
- 13
பச்சை நிறம் வெந்தபின் அடர்த்தியான பச்சை நிறமாக காணப்படும். நிறம் எதுவும் பயன்படுத்தவில்லை பாலக்கீரையை பயன்படுத்திய செய்ததால் குழந்தைகளுக்கு பிடித்த உணவாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட்