ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 2 கப் மைதா மாவு
  2. 1 டீஸ்பூன் சமையல் சோடா
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. 4 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1&1/2 கப் சர்க்கரை
  6. 1/2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  2. 2

    பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாக மாவு பிசையவும்.

  3. 3

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சூடு செய்து நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை நன்கு உருகியதும், பிசுக்கு பாதம் ஆனதும் சர்க்கரை பாகை இறக்கி தயாராக வைக்கவும்.

  4. 4

    பின்பு மாவை சப்பாத்தி போல் தேய்த்து, மாவு தூவி பைப்பை போல் கொஞ்சம் தடிமனாக ரோல் செய்யவும்.

  5. 5

    பின்னர் சிறிய துண்டுகளாக கட் செய்து ரௌண்டாக நடுக் கையில் வைத்துக்கொண்டு அழுத்தவும்.

  6. 6

    அதன் பின் ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள ஸ்பின் வீல்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  7. 7

    பொரித்தெடுத்த ஸ்பின் வீல்களை தயாராக உள்ள சர்க்கரை பாகில் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் சுவையான ஸ்பின் வீல் ஸ்வீட் சுவைக்கத்தயார்.

  8. 8

    இந்த ஸ்பின் வீல்ஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ். அனைவரும் செய்து குழந்தைகளுக்கு சுவைக்கக் கொடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes