முட்டை தக்காளிப் புட்டு
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.
- 4
இவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 5
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
இந்த மசாலா கலவையுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து பிரட்டி விடவும்.
- 7
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்கு வதங்கியதும் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி நன்கு பிரட்டவும்.
- 8
முட்டையுடன் சேர்ந்த தக்காளி கலவையை நன்கு பிரட்டி விட்டு 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து உதிரி உதிரியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 9
சுவையான முட்டை தக்காளிப் புட்டு ரெடி.
- 10
இது சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்