இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)

#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம்
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட்டை ஓரங்களை கட் பண்ணி எடுத்து வைக்க வேண்டும்.
- 2
சர்க்கரையை பவுடராக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது அந்த சக்கரையில் 4 டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு பக்கெட் அளவு காபி தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது 20 கிராம் அளவு சாக்லேட் அதனுடன் காய்ச்சிய பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
- 5
இப்பொழுது கேக் செய்ய ஆரம்பிக்கலாம்.அதற்கு ஒரு பிளேட்டில் ரெடி செய்து வைத்த கிரீமை தடவி அதன் மேல் ஓரங்கள் வெட்டப்பட்ட பிரட்டை வைத்து அதன் மேல் சுகர் சிறப்பை அப்ளை செய்யவேண்டும்.
- 6
பொழுது அதன்மேல் தயார் செய்து வைத்திருக்கும் சாக்லேட் சாஸ் தடவி விடவும்.
- 7
இப்படியே எல்லா அடுக்குகளையும் அடிக்கு மேலே ஒரு பிஸ்கட் வைத்து பரிமாறினால் சுவையான மற்றும் மிகவும் சுலபமான சாக்லேட் கேக் தயார்.
- 8
நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட்