அரைத்து விட்ட சர்க்கரை பூசணி சாம்பார் (Araithu vitta sarkarai poosani sambar recipe in tamil)

Srimathi @cook_23742175
அரைத்து விட்ட சர்க்கரை பூசணி சாம்பார் (Araithu vitta sarkarai poosani sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும் சர்க்கரை பூசணி யை 🎃சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சிறிது மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 2
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு கொத்தமல்லி சீரகம் மிளகு வெந்தயம் வற மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும் பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலையை பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த சர்க்கரை பூசணி🎃 வேக வைத்த துவரம்பருப்பு அரைத்த விழுது எல்லாம் சேர்த்து ஒரு கொதி விட வேண்டும் பின்னர் கரைத்த புளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும் இப்போது சுவையான அரைத்து விட்ட சர்க்கரை பூசணி🎃 சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14101368










கமெண்ட் (5)