ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)

#kids3/lunch box/week 3
*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.
*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
காய்கறி 1/4 அங்குல நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்சி இலை,அன்னாசிப் பூ, ஜாதிபத்திரி இவை சேர்த்து தாளித்து பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் காய்கறி மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி பாஸ்மதி அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு கொத்தமல்லி புதினா இலைகளை தூவி மற்றும் கொதிக்கவைத்த 4 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
- 3
இப்போது குக்கரை மூடி குறைவான தீயில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான ஹைதராபாத் வெஜ் பிரியாணி தயார்.இதனுடன் வெங்காய தயிர் பச்சடி மற்றும் கோபி 65 உடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)