சோயாபீன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
சோயாபீன்ஸ் 20 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்
- 2
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு துருவிய தேங்காய் 2 காய்ந்த மிளகாய் கொத்தமல்லி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- 5
வெங்காயம் நன்றாக பொன்னிறமான பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 6
அதன் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்
- 7
ஊற வைத்த சோயா பீன்ஸில் இருந்து தண்ணீரை பிழிந்து எடுத்து சோயாவின் சேர்த்து 2 நிமிடம் வதக்கி வேக வைக்கவும்
- 8
இப்போது ஊற வைத்த அரிசியை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு மஞ்சள் பிரியாணி மசாலா சேர்த்து குக்கரை மூடி வைக்கவும் விசில் வைக்க வேண்டாம்
- 9
குக்கரில் இருந்து ஆவி வெளியே வந்த பிறகு விசில் வைத்து மூன்று விசில் வந்த பிறகு அணைக்கவும்
- 10
சூடான சுவையான பிரியாணி தயார் இதை நீங்க வெங்காயம் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (5)