வெஜிடபிள் கட்லெட்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணி ஸ்வீட் கார்ன் உருளைக்கிழங்கு உப்பு இவற்றை 1/4டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்.
- 2
பத்து ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பொடித்து வைக்கவும்.வேக வைத்துள்ள காய்கறிகளை நன்கு மசித்து இரண்டு கையளவு ரஸ்க் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
காய்கறி கலவையை வட்டமாக தட்டி ரஸ்க் தூளில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுடவும்.
- 4
என் மகனுக்கு பிடித்த கட்லட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14485886















கமெண்ட் (3)