சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)

சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/4 பாசிப்பருப்பை கடாயில் சேர்த்து வறுத்து, கழுவி குக்கரில் 2 விசில் வேக வைத்து விடவும்.
- 2
1/2 சுரைக்காய் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.20 சின்ன வெங்காயம்,5 பல் பூண்டு, 1 தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை தாளித்து விடவும்.
- 3
அதில், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கி விடவும். வெந்த பாசிப்பருப்புடன் வதக்கிய காய்கறிகளை சேர்த்து விடவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- 4
1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி விட்டு, குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும்.
- 5
சுவையான பாசிப்பருப்பு சுரைக்காய் கூட்டு ரெடி😋😋 சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (4)