சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)

இட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும்.
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
இட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை தண்ணீரில் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
- 2
பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு மற்றும் உப்பு இவற்றை ஊறிய கடலை பருப்புடன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், கருவேப்பிலை மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
- 3
வடை கலவையை கலந்து கொள்ளவும். ஒரு வட சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடு செய்யவும். இதில் வடை கலவையை சிறிய அளவில் பக்கோடா போல போட்டு பொரித்தெடுக்கவும்.
- 4
பொரித்த வடையை கைகளால் ஒன்றும் பாதியுமாக உடைத்து கொள்ளவும். இவ்வாறு செய்வதனால் மசாலாவில் வடை நன்கு ஊறும்.வடை கறி மசாலா தயாரிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வட சட்டியில் கால் கப் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு,ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 5
நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். கூடவே தோலுடன் தட்டிய பூண்டு மற்றும் இடிச்ச இஞ்சியை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதியளவு வதங்கிய பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
அடுத்ததாக பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி மசியும் வரை வேக வைக்கவும்.
- 7
தக்காளி மஹிந்த பின் தேங்காய் முந்திரிப்பருப்பு மற்றும் கசகசாவை மைய அரைத்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். (குறிப்பு:தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வைத்திருக்கும் வகைகள் அதில் ஊறும் அளவு இருக்க வேண்டும்.) உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். வடையிலும் உப்பு இருப்பதால் தேவையானதை சேர்க்கவும். இதனை மூடி போட்டு கொதி வர வைக்கவும்.
- 8
நன்கு கொதித்த பின் பொறித்த வடையை இதில் சேர்க்கவும். இதனை சிறு தீயில் 3 நிமிடங்கள் கலந்து விடவும். எண்ணெய் மேலே வந்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- 9
கால்மணி நேரம் கழித்து பரிமாறலாம். அப்பொழுதுதான் வடை மசாலாவில் ஊறி சுவை கூடும். கமகம வாசனையுடன் சைதாப்பேட்டை வடகறி சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
-
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
-
-
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ் Shailaja Selvaraj -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D -
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
குருமா குழம்பு(khurma recipe in tyamil)
இந்த குழம்பு சாதம் மற்றும் பூரி சப்பாத்தி இட்லி தோசை பரோட்டா அனைத்து உணவுகளுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மட்டன் குழம்பு போல சுவை இருக்கும் # birthday1 Banumathi K -
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
- சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
- சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
- சுவை மிக்க பாதாம் வெங்காய சட்னி...(Badam venkaya chutney recipe in tamil)
- மதுரை கார சட்னி (Madurai kaara chutney recipe in tamil)
கமெண்ட் (2)