முருங்கை காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். 3வீசில் விட வேண்டும். புளி ஊற வைக்கவும். முருங்கை காயை அரிந்து கொள்ளவும். தக்காளி அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து 2 வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அரிந்த தக்காளி, முருங்கை காய், போட்டு வதக்கவும். வெந்த பருப்பில் போட்டு கலந்து விடவும். பிறகு. உப்பு சாம்பார் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
- 3
பின்னர் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றி. குக்கரில் 1விசில் விடவும். சுவையான சூடான முருங்கை காய் சாம்பார் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14694252













கமெண்ட் (4)