பிரெட் உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
2 பெரிய வெங்காயம், 3 பச்சை மிளகாய், 7பிரெட் எடுக்க வேண்டும்.
- 2
பிரெட் ஒரங்களை எடுத்து விட்டு சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைக்கவும். பெரிய வெங்காயம் பொடியாகநறுக்கி வைக்கவும். முந்திரி பருப்பு உடைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, முந்திரி பருப்பு வறுத்து,பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மிக்சியில் அரைத்த பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு போடவும். பிறகு பிரெட் துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சூடான சுவையான பிரெட் உப்புமா ரெடி. காபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்