ஆற்காடு மக்கன் பேடா

ஆற்காடு மக்கன் பேடா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும். பாகு கொதித்து ஒரு கம்பிப் பதம் வரும் நேரத்தில் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை தனியே வைக்கவும்.
- 2
குலாப் ஜாமுன் மிக்ஸ் சலிச்சு கட்டி இல்லாமல் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதில் ரூம் டெம்பரேச்சர் இல் இருக்கும் வெண்ணெய் சேர்த்து லேசாக கலக்கவும். பிறகு பால் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து அழுத்தம் கொடுக்காமல் பிசைந்து உருட்டி வைக்கவும். இந்த மாவை மூடி போட்டு கால் மணி நேரம் வைக்கவும்.
- 3
கால் மணி நேரத்திற்குப் பிறகு இந்த மாவில் 12 உருண்டைகளாக பிடிக்கவும். நான் இங்கு பெரிய மக்கன் பேடா செய்துள்ளேன். விரும்பினால் மாவின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் நெய் தடவி அதில் உருட்டிக் கொள்ளவும். இதில் நடுவே ஒரு நடக்கும் ஆள்காட்டி விரல் வைத்து அழுத்தவும். அந்தப் புள்ளியில் நறுக்கிய நட்ஸ் வைத்து மூடி மீண்டும் உருட்டவும். வெடிப்பு இல்லாமல் ஒரு டீ பேடா போல வடிவத்தில் அழுத்தம் கொடுத்து தயார் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து வைக்கவும்.
- 4
பொறிக்க நெய் சூடு செய்யவும். இதில் ஒவ்வொரு இடமாக போட்டு தீயை குறைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த அனைத்துக் கடைகளையும் சர்க்கரைப் பாகில் சேர்த்து ஒரு நாள் ஊற வைக்கவும்.
- 5
அவ்வளவு தான் மிகவும் சுவையான மக்கன் பேடா சுவைக்கத் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)